நகை மதிப்பீட்டாளரை காரில் கடத்திச் சென்ற 6 பேர் கைது; கூடுதல் பணம் கேட்டும் மிரட்டல்

By தினமலர்

நகை மதிப்பீட்டாளரை காரில் கடத்திச் சென்ற 6 பேர் கைது; கூடுதல் பணம் கேட்டும் மிரட்டல்
WhatsApp Facebook

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கூடுதல் பணம் கேட்டு தனியார் நிதி நிறுவன நகை மதிப்பீட்டாளர் அனீைஷ 29, தாக்கி காரில் கடத்திச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த அனீஷ் 29, தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் செல்வக்குமார் 46, என்பவர் 33 கிராம் தங்க நகையை வங்கியில் அடகு வைத்திருந்தார்.

அந்த நகையை மீட்டு விற்று கடன் தொகையை கழித்து மீதிப்பணத்தை அனீஷ் அவரிடம் கொடுத்தார்.

இந்நிலையில் செப்., 20ல் செல்வக்குமார், நகையின் மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறி கூடுதல் பணம் கேட்டு அனீைஷ மிரட்டியுள்ளார். பின் உழவர் சந்தை அருகே பேச வருமாறு அழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து அனீைஷ காரில் கடத்திச் சென்றார்.

தகவலறிந்த போலீசார் குருநாதன் கோயில் அருகே காரை வழிமறித்து அனீைஷ மீட்டனர்.

இது தொடர்பாக செல்வக்குமார், கோபாலகிருஷ்ணன் 27, மகாராஜா சுதர்சன் 24, விஜயன் 24, சுரேஷ் 28, கோமு 28, ஆகியோரை கைது செய்தனர்.