பெட்ரோல் குண்டு வீசிய இருவருக்கு குண்டாஸ்

By தினமலர்

பெட்ரோல் குண்டு வீசிய இருவருக்கு குண்டாஸ்
WhatsApp Facebook

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் முத்துராமலிங்கத்தேவர் பீடம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ராமதுரை 22, சந்தனகுமார் 21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் நேற்று திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டனர்.