UPDATED : செப் 23, 2026 11:34 AM ADDED : செப் 23, 2026 10:05 AM
சென்னை: சென்னையில் இன்று (செப் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 21) ஆபரண தங்கம் கிராம், 14,270 ரூபாய்க்கும், சவரன், 1,14,160 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி நிலவரம்: வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 3 தினங்களாக சரிந்து வரும் தங்கம் விலை; இன்றைய நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
